தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என கல்வித்துறை விளக்கம்.
தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் விளக்கம் கொடுத்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை இயக்கம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது., "தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது" என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த பிப்ரவரி 1 ஆன் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. நடப்பு ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு மே மாதம் இறுதி வரை நடைபெறுகிறது. தற்போது, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை இந்த ஆண்டுக்கான இறுதி தேர்வு நடைபெறாது என்று நேற்று ஒரு தகவல் பரவியது. மேலும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வரை மட்டுமே ஆண்டுத்தேர்வு நடைபெறும் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது. அதனால் 1 ஆம் வகுப்பு முதல் 12 எம் வகுப்பு வரை பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி முடிவடைகிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே மாதம் 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையும். 10 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது. அத்துடன், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post