ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, ஜூலை 2-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தேர்வு, ஜூலை 2-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 04.04.2022 நாளிட்ட அறிவிக்கை எண் 10/2022-ல், 26.06.2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வானது, 02.07.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post