இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு 2022-23 கல்வியாண்டில் நாடு முழுவதும் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 2022-2023ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு 10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 2,57,562 பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத 1,42,286 பேர் விண்ணப்பத்துள்ளனர். மேலும், தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத 31,803 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நாடு முழுவதும் 91,415 எம்பிபிஎஸ் இடங்கள், 26,949 பிடிஎஸ் இடங்கள், 50,720 ஆயுஷ் இடங்கள் என்று 1,69,084 இடங்களுக்கு மொத்தம் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post