2017 -2018 ஆம் வருடத்திற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இதனையடுத்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு 2021 டிசம்பர் 8ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கணினி வழி தேர்வு நடத்தப்பட்டது. அதன் மூலம் தேர்வு முடிவுகள் 2022 மார்ச் எட்டாம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 16, 17, 18-ந் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதம் https://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். நேரடியாக அனுப்பப்படாது. அழைப்பு கடிதத்தை ஜூலை 14 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post