டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வில் மொத்தம் 5,529 பணிகள் இருந்த நிலையில்‌, 11 லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர். இந்த வருடம் குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்ததால் அதற்கான தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து தேர்வுதாரர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஜூன் மாதத்தில் குரூப் 2, 2‌ஏ தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான கட் ஆப் மார்க் வெளியாகியுள்ளது.

இந்த முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான‌ https://tnpsc.gov.in என்ற முகவரிக்குள் செல்ல வேண்டும். அதன் பிறகு latest results/result declaration schedule என்பதை கிளிக் செய்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ரிசல்ட் என்பதை கிளிக் செய்தால் கட் ஆப் மார்க் தெரியும்.

Post a Comment

Previous Post Next Post