சென்னை: நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பதவிக்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு பொது பணிகளில் அடங்கிய நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பதவியில் காலியாக உள்ள 29 பணியிடங்களுக்கு கடந்த மே மாதம் 28ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 1,293 பேர் கலந்து கொண்டனர்.

இத்தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 272 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருகிற 22ம் தேதி அடுத்த மாதம் 1ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post