கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஜூலை 6-ம் தேதி விடுமுறையாகும்.. மேலும் இந்த விழாவுக்காக நாகர்கோயில், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன..
Post a Comment