அரசு பள்ளிகளில் 'சிறார் திரைப்பட விழா' நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் 'சிறார் திரைப்பட விழா' நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில், 'அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். மாணவர்களின் வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்தும் வகையில் இந்த சிறார் திரைப்பட விழாவானது நடத்தப்பட இருக்கிறது. திரைப்படம் முடிந்த பின்னர் அது குறித்து கலந்துரையாடல், வினாடி வினா போன்ற நிகழ்வுகளும் நடத்தப்படும். திரையிடப்படும் திரைப்படங்கள் குறித்து சிறந்த விமர்சனம் எழுதும் மாணவர்களின் கருத்து சிறார் இதழில் பிரசுரிக்கப்படும். சிறார் திரைப்பட விழாவுக்கென தனி செயலி உருவாக்கப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post