அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18 (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
அரியலூர் மாவட்டத்தில்
18 (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி கிராமத்தில் வரதராஜ பெருமாள் தேர் திருவிழா நடைபெற உள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
உலக முழுவதும் கொரோனா பரவலின் காரணமாக 2 வருட காலமாக எந்த ஒரு திருவிழாக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சம் குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் சித்திரை திருவிழா,புதுக்கோட்டை தேர் திருவிழா மற்றும் மீனாட்சி திருக்கல்யாணம் உட்பட மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் தங்களின் நேற்றி கடன்களை நிறைவேற்றுவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – பாதுகாப்பு பணியில் போலீசார் குவிப்பு!
மேலும்,தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டு வரும். குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் நடைபெறும் திருவிழாக்களில் தமிழகம் முழுவதும் விடுமுறை விடாமல் அந்த அந்த மாவட்டத்தில் மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அதுமட்டுமின்றி, சிறப்பு நாட்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நாட்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக மாவட்ட நிர்வாகம் உத்தரவு வெளியிடும். குறிப்பிட்ட நாளுக்கு பதிலாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும், தமிழ்நாடு அரசு பள்ளி தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு மற்றும் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி தேர்வுகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post