யூஜிசி நெட் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் - முக்கிய அறிவிப்பு வெளியானது. தேசிய தகுத் தேர்வை ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூலை மாதத்துக்கான யுஜிசி தேசிய தகுத் தேர்வை ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் / அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் திசம்பர் மாதங்களில் இணையவழி நடத்தப்படுகிறது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்ப செயல்முறை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஜூன் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களுக்குள் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூன் மாதத்துக்கான தேர்வை தேசிய தேர்வு முகமை ஒருங்கே நடத்தியது.
இத்தேர்வினை பல்கலைக்கழக மானியக் குழுவிற்காகத் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. ஜூலை 2018 வரை, நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) யுஜிசி நெட் தேர்வை நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வித்தகுதி:
பொதுப்பிரிவினர் முதுநிலைப் பட்டப்பிரிவில் 55% மதிப்பெண்களும், மற்றவர்கள் முதுகலைப் பட்டத்தில் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்கவேண்டும் என்பது குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாகும்.
தேர்வு, இரண்டு தாள்களாகப் பிரிக்கப்படும்: தாள் 1 மற்றும் தாள் 2. தேர்வு காலம் மூன்று மணி நேரம். மொத்தம் 150 கேள்விகள். யுஜிசி நெட் தகுதி (Cut-off) மதிப்பெண்களாகத் தாள் I மற்றும் தாள் IIஇல் 40% ஆகவும், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்டவர்/பொருளாதாரத்தில் பிந்தங்கியோருர்/திருநங்கைகளுக்கான தகுதி மதிப்பெண்கள் I மற்றும் II தாள்களில் 35% ஆகவும் உள்ளன. உதவிப் பேராசிரியர் பணிக்கு,குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்ற தேர்வாளர்களில், இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி ஒரு தகுதி பட்டியல் பாடவாரியாகவும் இனவகை வாரியாகவும் தயாரிக்கப்படும்.
அதேசமயம், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகைக்குத் தனியாகத் பட்டியல் தயாரிக்கப்படும். இளநிலை ஆய்வு நிதி விருதுக்குத் தனித் தகுதி பட்டியல் மேலே தயாரிக்கப்பட்ட தகுதி பட்டியலில் உள்ள நெட் தகுதி வாய்ந்த தேர்வாளர்களிடமிருந்து தயாரிக்கப்படும்.
Published by:Salanraj R
First published: April 11, 2022, 18:52 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Post a Comment

Previous Post Next Post