அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 10,371 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் எனவும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு 2020, 2021-ம் ஆண்டுகளில் நடத்தப்படாத நிலையில், கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அதில் மார்ச் 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், ஏப்ரல் 26 வரை விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் கூறியுள்ளது.இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 25 முதல் 31-ம் தேதி வரையுள்ள தேதிகளில் தாள் 1-க்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு கால அட்டவணை, ஹால் டிக்கெட் விவரம் ஆகஸ்ட் 2-ம் வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post